Saturday, December 18, 2010

மரங்களை வெட்டுங்கள்

சமீபத்தில் ஒரு forward mail ல் வந்த விஷயம் உங்கள் பார்வைக்கு.....
(இது நம்ம சொந்த சரக்கு இல்லீங்க...மெயிலில் இருந்து சுட்டது.)

மரங்களை வெட்டுங்கள்






உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் ( குளோபல் வார்மிங் ) பற்றி பயந்து

கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் 'மரங்களை நடுங்கள்' என்ற ஒரே

கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்'

என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான்

சொல்வதை முழுவதும் கவனித்தால் நீங்களும் ' ஆமாம் கண்டிப்பாக வெட்ட

வேண்டும் ' என்று சொல்வீர்கள். அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம்

மண்ணின் மாண்பை காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்கு

கொடுக்கும் ஒரே எச்சரிக்கை.





மண்ணின் வில்லன்



அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு

தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான்

நான் குறிப்பிட போகிற விஷ மரம். தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும்,

பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம்

எனப்படும் 'காட்டு கருவேல மரம்' தான் அது. ( பேராண்மை படத்தில் கூட

ஜெயம்ரவி மாணவிகளுடன் சேர்ந்து காட்டுக்குள் இருக்கும் மரத்தை

வெட்டிகொண்டே விளக்கம் சொல்வாரே ! )



நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை

இங்கு தூவியதாக ஒரு கருத்தும் , கிராம மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு

வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி ( நல்ல எண்ணம்தான், இதன் நச்சு

தன்மை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம் ) வெளிநாட்டில் இருந்து

தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. உண்மை எதுவென்று '

யாம் அறியேன் பராபரமே'





ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல...., இப்போதைய பிரச்சனை....!? ,

இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான்

அவசியம். முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.





இதன் கொடூரமான குணங்கள்





இவை எந்த வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல்

போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது.

பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி , தன்

இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது, ( அடுத்தவர்களின் உழைப்பை

உறிஞ்சி வாழும் சில சுயநல மனிதர்களை போல...! ) இதனால் நிலத்தடி நீர்

முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது...!





இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே

கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி செல்லும் காற்றில்

இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது..... ??!! இப்படி

காற்றின் ஈரபதத்தையும் , நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே

வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.





தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின்

வறட்சிக்கு இந்த மரங்களே முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான்.

ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து

பராமரிக்கிறார்கள் என்று என்னும் போது அறியாமையை குறித்து வருந்த வேண்டி

இருக்கிறது.





உடம்பு முழுதும் விஷம்





இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும்

பயன்படாது. முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது , ஆச்சரியமாக இருந்தாலும்

உண்மை அதுதான். இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால்

அவை மலடாகிவிடும் , அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி

கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான் பிறக்கும்....?!!





ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றிவிடுகிறது மற்றொரு

புறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை இருக்கிறது.

இதன் பக்கத்தில் வேறு என்ற செடியும் வளராது, தவிர மரத்தில் எந்த பறவை

இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை.





காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள், ஆக்சிசனை மிக குறைந்த

அளவே உற்பத்தி செய்கிறது , ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி

செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுதன்மையாக

மாறிவிடுகிறது .





அறியாமை





நமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம்

என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.





கேரளாவின் விழிப்புணர்வு





நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை

வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்.....!! அதனால் கேரளாவில்

இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது. ஆனால் நம்

தமிழ்நாட்டில் விறகிற்க்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்....??!

என்ன முரண்பாடு...?? என்ன அறியாமை..??





ஆராய்ச்சியாளர்களும், இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும்

மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும்

என்று கண்டு பிடித்து உள்ளனர்.





நல்ல மரம் ஆரோக்கியம்





வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும்

ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதை

உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக

விழிப்புணர்ச்சி நம்மிடம் இல்லையே என்பதே என் ஆதங்கம் .





சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை

பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி

எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த

மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம், செய்வார்களா?





இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம்

கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.



மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது

வெட்டி அழிப்பது அதை விட அவசியம்....



இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்.....! நம் மண்ணின் மாண்பை காப்போம்..!!

Thursday, August 19, 2010

இன்றைய இந்திய கால்பந்து அணி - சில செய்திகள்

ஐரோப்பாவில் நடக்கும் யூரோ கோப்பை போல் ஆசியாவில் நடக்கும் ஆசிய கோப்பை ஆசிய அளவில் நடந்திடும் போட்டிகளில் முக்கியமான போட்டியாகும்.


1984 - இதுதான் இந்திய கால்பந்து அணி இறுதியாக விளையாடிய ஆசிய கோப்பை. இதுதான் இந்திய அணி பங்கு கொண்ட சற்று பெரிய போட்டியும் கூட. அதிசயமாக 2011ல் கதாரில் நடக்க கூடிய ஆசிய கோப்பைக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. 2008ல் AFC challenge cup போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்த அறிய வாய்ப்பு இந்திய அணிக்கு கிடைத்துள்ளது. இந்திய அணி பயிற்சியாளர் பாப் ஹட்டன் வழக்கமாக வெவ்வேறு கிளப் அணிகளுக்காக விளையாடும் நமது அணி வீரர்களை ஒன்பது மாதங்கள் ஒருகிணைத்து பயிற்சி கொடுத்து கொண்டிருக்கிறார்.


தற்போது போர்ச்சுகல் நாட்டில் பயிற்சி எடுத்துகொண்டிருக்கும் நமது அணி பற்றிய லேடஸ்ட் தகவல் என்னவென்றால் செப்.14 ஆம் தேதியன்று டெல்லியில் வட கொரிய தேசிய அணியுடன் நமது அணி விளையாட போகிறது என்பதாகும். உலக கோப்பை அணி ஒன்றுடன் இந்திய அணி மோதுவது நீண்ட நாட்களுக்கு பின் இப்போது தான். இதற்கு முன்பாக தாய்லாந்து அணியுடன் இரண்டு போட்டிகளில் விளையாடுகிறது. 2009 ல் நேரு கோப்பைக்கு பின் இந்திய அணி விளையாடும் முதல் சர்வதேச போட்டி இதுவாகும். இவை மூன்று தவிர வேறு சில சர்வதேச போட்டிகளிலும் விளையாட உள்ளது. இப்போட்டிகள் நமது அணியினருக்கு சிறந்த பயிற்சி தரும் என்பதில் சந்தேகம் இல்லை.


பயிற்சியில் இந்திய அணி




இந்திய கிரிகெட் அணி கிட்டதட்ட தினமும் ஏதாவது ஒரு போட்டியில் விளையாடி வருகிறது. கால்பந்து அணியோ இவ்வளவு நாட்களுக்கு பின் விளையாடுகிறது. இந்த நிலையில் நமது அணி வீரர்களுக்கு ஊக்கம் ரொம்ப முக்கியமாகும். இதை நமது ஊடகங்கள் ரசிகர்கள் அனைவரும் உணர வேண்டும். தற்போதைய நிலையில் இந்த போட்டிகள் தொலைகாட்சியில் ஒளிபரப்படுமா என தெரியவில்லை. நண்பர்கள் யாரேனும் தகவல் தெரிந்தால் கூறவும்.

ஆசிய கோப்பையில் இந்தியாவின் குரூப் ஆசிய கோப்பையின் மரண கிணறு என கூறப்படுகிறது. இங்கு இந்தியாவின் FIFA தரவரிசை138 என்பது முக்கியமான தகவல் ஆகும்.

ஆஸ்திரேலியா (FIFA தரவரிசை 20)
தென் கொரியா (FIFA தரவரிசை 44)
பக்ரைன் (FIFA தரவரிசை 68)
தென்கொரியா அணி தற்பொது ஆஸ்திரேலிய அணியை விட அலுவான நிலையில் உள்ளது. பக்ரைன் சிறந்த வளரும் அணி எனும் விருதை சமீபத்தில் FIFA விடம் இருந்து வாங்கியுள்ளது. இந்நாட்டின் மக்கள் தொகை வெறும் 7 லட்சம் ஆகும் (சென்னையின் மக்கள் தொகை 40 லட்சம்). இந்த குரூப்பில் இந்தியா ஏதேனும் ஒரு போட்டியை சமன் செய்தாலே பெரிய விஷயம். ஆனாலும் அனைத்து போட்டிகளிலும் வென்று வர வாழ்த்துவோம்.

இந்தியாவின் புகழை உலகம் முழுவதும் பரப்பிக்கொண்டிருக்கும் காமன்வெல்த் போட்டிகளில் கால்பந்து கிடையாது. இதை நல்ல செய்தியாகவும் கெட்ட செய்தியாகவும் எடுத்துகொள்வது அவரவர் விருப்பம்.

அதே சமயம் சினாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா விளையாடுவதாக தெரிகிறது. இப்போட்டியில் 23 வயதிற்கு உட்பட்ட அணியே விளையாடும். ஆசிய போட்டி கால்பந்துவின் முதல் தங்கம் வென்ற பெருமையுடன் இந்தியா களம் இறங்குகிறது.

ஆக, முக்கியமான போட்டிகளில் களம் இறங்கும் இந்திய அணியை ஊக்குவிப்போம். மக்கள் கிரிக்கெட் தவிர எந்த விளையாட்டையும் பார்ப்பதில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு நிலவுகிறது. என் கருத்துப்படி மக்கள் மேற்கண்ட போட்டிகளை பார்க்க தயாராகவே உள்ளனர். மீடியாக்களும் தொலைகாட்சிகளும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை சரியாக செய்ய வேண்டும்

Tuesday, July 6, 2010

ஒலிம்பிக் கால்பந்து

எந்த ஒரு புகழ்பெற்ற விளையாட்டிலும் இரண்டு விதமான உகல சாம்பியன் போட்டிகள் இருக்கும். ஒன்று அந்த விளையாட்டிற்கென நடக்கும் உலக கோப்பை, மற்றொன்று அனைத்து விதமான போட்டிகளும் இடம்பெறும் ஒலிம்பிக் போட்டிகள். (இதில் கிரிகெட் மட்டும் விதிவிலக்கு)
பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் உலக கோப்பை கால்பந்து போட்டிகளில் அரையிறுதி போட்டிகள் விரைவில் துவங்க இருக்கின்றன. உலக நாடுகளில் கால்பந்து சேம்பியன் யார் என்பதை தீர்மானிப்பது இந்த உலக கோப்பைதான் என்றாலும் உலக நாடுகள் அனைத்தும் ஏற்றுகொள்ளும் மற்றொரு சேம்பியன் ஒலிம்பிக் தங்க பதக்க வெற்றியாளர் ஆகும். உலக கோப்பை பற்றி பல பத்திரிக்கைகளிலும் நீங்கள் படித்திருப்பீர்கள். ஆனால் ஒலிம்பிக் கால்பந்து பற்றி அவ்வளவாக யாரும் கண்டுகொள்ளவில்லை. ஒலிம்பிக் கால்பந்து பற்றி சில தகவல்கள்.

  • ஒலிம்பிகில் கால்பந்து 1900 முதல் விளையாடப்படுகிறது. 2008 ல் சீனாவில் நடந்த ஒலிம்பிக் கால்பந்து 24வது ஒலிம்பிக் கால்பந்து ஆகும்.
  • நடப்பு சேம்பியன் அர்ஜண்டீனா. 2008 வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றோர் முறையே நைஜீரியா மற்றும் பிரேசில்
  • ஒலிம்பிக் கால்பந்து போட்டிகளில் இந்தியாவும் ஒரு குறிப்பிட்ட அளவு சாதித்து இருக்கிறது. 1948, 1952, 1956, 1960 ஆண்டுகளில் ஒலிம்பிக் கால்பந்திற்கு தகுதி பெற்று விளையாடி இருக்கிறது. இதில் 1956ல் அரையிறுதி வரை முன்னேறி இருக்கிறது. வெண்கல பதக்க போட்டியில் பல்கேரியாவிடம் 3-0 என்ற கண்க்கில் தோற்று ஒலிம்பிக் கால்பந்து போட்டியில் பதக்கம் வாங்கும் வாய்ப்பை இழந்தது. (இந்த வருடம் ஹங்கேரி புரட்சி காரணமாக வெறும் 11 அணிகள் மட்டுமே கலந்து கொண்டன) . இந்தகால கட்டத்தில்தான் (1954) இந்திய அணி உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றும் விளையாடவில்லை.
  • ஐந்து முறை உலக கோப்பை சேம்பியன் பிரேசில் இதுவரை ஒலிம்பிக் கால்பந்து போட்டிகளில் ஒரு முறை கூட தங்கம் வென்றதில்லை.

  • உலக கோப்பையில் எந்த ஆப்பிரிக்க அணியும் அரையிறுதி எட்டியதில்லை. ஆனால் ஒலிம்பிக் கால்பந்து போட்டிகளில் ஆப்பிரிக்க அணிகளின் சாதனை குறிப்பிடத்தக்கது.நைஜீரியா - ஒரு தங்கம்(1996), ஒரு வெள்ளி(2008), கேமரூன் - ஒரு தங்கம்(2000), கானா- ஒரு வெண்கலம் (1992) என அவர்களின் சாதனை பட்டியல் இருக்கிறது.
  • ஆசிய நாடுகளை பொருத்த வரை ஜப்பான் மட்டும் ஒரே ஒரு முறை வெண்கலம் வென்று இருக்கிறது (1968). இதுவரை மூன்று ஆசிய நாடுகள் மட்டுமே அரை தகுதி பெற்று உள்ளன. ஜப்பான், இந்தியா மற்றும் ஈராக் (2004)
  • ஒட்டு மொத்தமாக ஹங்கேரி மற்றும் இங்கிலாந்து அணிகள் மூன்று முறை தங்கம் பெற்று முதலிடத்திலும் அர்ஜண்டீணா, ரஷ்யா மற்றும் உருகுவே அணிகள் 2 முறை தங்கம் பெற்று இரண்டாவது இடத்திலும் இருக்கின்றன.
ஒலிம்பிக்கில் பெண்கள் கால்பந்தும் உண்டு. இதனை பற்றி தகவல்களை விட படங்களே சுவாரிஸ்யம் என்பதால் உங்களுக்காக சில படங்கள்


 இது வரை பொறுமையாக படித்தற்கு நன்றி. நேரம் கிடைக்கும் போது இது மாதிரி எதாவது எழுதலாம் என இருக்கிறேன். பார்க்கலாம்.......