Saturday, May 7, 2011

சிகரெட் அட்டை

புகைபிடிப்பதினால் வரும் கேடுகளை பயன்பாட்டாளர்கள் உணர வேண்டும் எனும் நோக்கத்தில், புகைபிடிப்பதினால் வரும் கேடுகளை உணர்த்தும் படங்களை சிகரெட் அட்டையில் பிரசுரிக்க வேண்டும் என்பது சட்டம். இதே சட்டம் தாய்லாந்திலும் உள்ளது. ஆனால் இந்த இரு நாடுகளைலும் இந்த சட்டம் எப்படி நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது என்பதை கீழ் கண்ட படங்கள் விளக்குகின்றன.

இந்திய சிகரெட் அட்டை :

தாய்லாந்து சிகரெட் அட்டை
சிகரெட்டினால் நம் நுரையீரல் பாதிக்கும் விதத்தை பளீரென முகத்தில் அடிப்பது போல் கூறுகிறது தாய்லாந்து அட்டை.
இந்திய சிகரெட் அட்டையில் இருக்கும் படம் ஒரு நுரையீரல் என்பதை யாராவது சொல்லிதான் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

Sunday, January 9, 2011

ஆசிய கோப்பை - சாதிக்குமா இந்திய அணி??

நாளை நடக்கும் முதல் லீக் போட்டியில் இந்திய கால்பந்து அணி ஆஸ்திரேலிய அணியை சந்திக்கிறது. அணி வீரகளின் காயம், நட்பு ஆட்டங்களில் அவமான தோல்வி என்று உற்சாகம் இல்லாமல் அணி இந்த போட்டிகளை எதிர் கொள்கிறது.

(சிறிது நாட்களுக்கு முன் இந்திய கால்பந்து அணி பற்றிய பதிவை இங்கு மீள்பதிவு செய்கிறேன்)

ஐரோப்பாவில் நடக்கும் யூரோ கோப்பை போல் ஆசியாவில் நடக்கும் ஆசிய கோப்பை ஆசிய அளவில் நடந்திடும் போட்டிகளில் முக்கியமான போட்டியாகும்.


1984 - இதுதான் இந்திய கால்பந்து அணி இறுதியாக விளையாடிய ஆசிய கோப்பை. இதுதான் இந்திய அணி பங்கு கொண்ட சற்று பெரிய போட்டியும் கூட. அதிசயமாக 2011ல் கதாரில் நடக்க கூடிய ஆசிய கோப்பைக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. 2008ல் AFC challenge cup போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்த அறிய வாய்ப்பு இந்திய அணிக்கு கிடைத்துள்ளது. இந்திய அணி பயிற்சியாளர் பாப் ஹட்டன் வழக்கமாக வெவ்வேறு கிளப் அணிகளுக்காக விளையாடும் நமது அணி வீரர்களை ஒன்பது மாதங்கள் ஒருகிணைத்து பயிற்சி கொடுத்து கொண்டிருக்கிறார்.



தற்போது போர்ச்சுகல் நாட்டில் பயிற்சி எடுத்துகொண்டிருக்கும் நமது அணி பற்றிய லேடஸ்ட் தகவல் என்னவென்றால் செப்.14 ஆம் தேதியன்று டெல்லியில் வட கொரிய தேசிய அணியுடன் நமது அணி விளையாட போகிறது என்பதாகும். உலக கோப்பை அணி ஒன்றுடன் இந்திய அணி மோதுவது நீண்ட நாட்களுக்கு பின் இப்போது தான். இதற்கு முன்பாக தாய்லாந்து அணியுடன் இரண்டு போட்டிகளில் விளையாடுகிறது. 2009 ல் நேரு கோப்பைக்கு பின் இந்திய அணி விளையாடும் முதல் சர்வதேச போட்டி இதுவாகும். இவை மூன்று தவிர வேறு சில சர்வதேச போட்டிகளிலும் விளையாட உள்ளது. இப்போட்டிகள் நமது அணியினருக்கு சிறந்த பயிற்சி தரும் என்பதில் சந்தேகம் இல்லை.

பயிற்சியில் இந்திய அணி




இந்திய கிரிகெட் அணி கிட்டதட்ட தினமும் ஏதாவது ஒரு போட்டியில் விளையாடி வருகிறது. கால்பந்து அணியோ இவ்வளவு நாட்களுக்கு பின் விளையாடுகிறது. இந்த நிலையில் நமது அணி வீரர்களுக்கு ஊக்கம் ரொம்ப முக்கியமாகும். இதை நமது ஊடகங்கள் ரசிகர்கள் அனைவரும் உணர வேண்டும். தற்போதைய நிலையில் இந்த போட்டிகள் தொலைகாட்சியில் ஒளிபரப்படுமா என தெரியவில்லை. நண்பர்கள் யாரேனும் தகவல் தெரிந்தால் கூறவும்.

ஆசிய கோப்பையில் இந்தியாவின் குரூப் ஆசிய கோப்பையின் மரண கிணறு என கூறப்படுகிறது. இங்கு இந்தியாவின் FIFA தரவரிசை138 என்பது முக்கியமான தகவல் ஆகும்.


ஆஸ்திரேலியா (FIFA தரவரிசை 20)

தென் கொரியா (FIFA தரவரிசை 44)

பக்ரைன் (FIFA தரவரிசை 68)

தென்கொரியா அணி தற்பொது ஆஸ்திரேலிய அணியை விட அலுவான நிலையில் உள்ளது. பக்ரைன் சிறந்த வளரும் அணி எனும் விருதை சமீபத்தில் FIFA விடம் இருந்து வாங்கியுள்ளது. இந்நாட்டின் மக்கள் தொகை வெறும் 7 லட்சம் ஆகும் (சென்னையின் மக்கள் தொகை 40 லட்சம்). இந்த குரூப்பில் இந்தியா ஏதேனும் ஒரு போட்டியை சமன் செய்தாலே பெரிய விஷயம். ஆனாலும் அனைத்து போட்டிகளிலும் வென்று வர வாழ்த்துவோம்.

ஆக, முக்கியமான போட்டிகளில் களம் இறங்கும் இந்திய அணியை ஊக்குவிப்போம். மக்கள் கிரிக்கெட் தவிர எந்த விளையாட்டையும் பார்ப்பதில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு நிலவுகிறது. என் கருத்துப்படி மக்கள் மேற்கண்ட போட்டிகளை பார்க்க தயாராகவே உள்ளனர். மீடியாக்களும் தொலைகாட்சிகளும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை சரியாக செய்ய வேண்டும்

Thursday, January 6, 2011

தமிழ் இலக்கியத்தில் Management concept

தமிழ் இலக்கியத்தில் Management concept என்பது அரிது அல்ல. கொஞ்சம் ஆழத்தேடினால் அனைத்தும் கிடைத்துவிடும்.
ஒரு உதாரணம்:
"Learn to say no" என்பது ஒரு புகழ்பெற்ற Management concept. உங்களால் உண்மையிலேயே முடியாது என்கிற ஒரு செயல்க்கு கண்டிப்பாக நீங்கள் இல்லை என்றே சொல்ல வேண்டும் என்கிறது இந்த Management concept.

இதை ஒளவையாரின் பாடல் ஒன்றில் தெளிவாக காணலாம்