Tuesday, July 6, 2010

ஒலிம்பிக் கால்பந்து

எந்த ஒரு புகழ்பெற்ற விளையாட்டிலும் இரண்டு விதமான உகல சாம்பியன் போட்டிகள் இருக்கும். ஒன்று அந்த விளையாட்டிற்கென நடக்கும் உலக கோப்பை, மற்றொன்று அனைத்து விதமான போட்டிகளும் இடம்பெறும் ஒலிம்பிக் போட்டிகள். (இதில் கிரிகெட் மட்டும் விதிவிலக்கு)
பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் உலக கோப்பை கால்பந்து போட்டிகளில் அரையிறுதி போட்டிகள் விரைவில் துவங்க இருக்கின்றன. உலக நாடுகளில் கால்பந்து சேம்பியன் யார் என்பதை தீர்மானிப்பது இந்த உலக கோப்பைதான் என்றாலும் உலக நாடுகள் அனைத்தும் ஏற்றுகொள்ளும் மற்றொரு சேம்பியன் ஒலிம்பிக் தங்க பதக்க வெற்றியாளர் ஆகும். உலக கோப்பை பற்றி பல பத்திரிக்கைகளிலும் நீங்கள் படித்திருப்பீர்கள். ஆனால் ஒலிம்பிக் கால்பந்து பற்றி அவ்வளவாக யாரும் கண்டுகொள்ளவில்லை. ஒலிம்பிக் கால்பந்து பற்றி சில தகவல்கள்.

  • ஒலிம்பிகில் கால்பந்து 1900 முதல் விளையாடப்படுகிறது. 2008 ல் சீனாவில் நடந்த ஒலிம்பிக் கால்பந்து 24வது ஒலிம்பிக் கால்பந்து ஆகும்.
  • நடப்பு சேம்பியன் அர்ஜண்டீனா. 2008 வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றோர் முறையே நைஜீரியா மற்றும் பிரேசில்
  • ஒலிம்பிக் கால்பந்து போட்டிகளில் இந்தியாவும் ஒரு குறிப்பிட்ட அளவு சாதித்து இருக்கிறது. 1948, 1952, 1956, 1960 ஆண்டுகளில் ஒலிம்பிக் கால்பந்திற்கு தகுதி பெற்று விளையாடி இருக்கிறது. இதில் 1956ல் அரையிறுதி வரை முன்னேறி இருக்கிறது. வெண்கல பதக்க போட்டியில் பல்கேரியாவிடம் 3-0 என்ற கண்க்கில் தோற்று ஒலிம்பிக் கால்பந்து போட்டியில் பதக்கம் வாங்கும் வாய்ப்பை இழந்தது. (இந்த வருடம் ஹங்கேரி புரட்சி காரணமாக வெறும் 11 அணிகள் மட்டுமே கலந்து கொண்டன) . இந்தகால கட்டத்தில்தான் (1954) இந்திய அணி உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றும் விளையாடவில்லை.
  • ஐந்து முறை உலக கோப்பை சேம்பியன் பிரேசில் இதுவரை ஒலிம்பிக் கால்பந்து போட்டிகளில் ஒரு முறை கூட தங்கம் வென்றதில்லை.

  • உலக கோப்பையில் எந்த ஆப்பிரிக்க அணியும் அரையிறுதி எட்டியதில்லை. ஆனால் ஒலிம்பிக் கால்பந்து போட்டிகளில் ஆப்பிரிக்க அணிகளின் சாதனை குறிப்பிடத்தக்கது.நைஜீரியா - ஒரு தங்கம்(1996), ஒரு வெள்ளி(2008), கேமரூன் - ஒரு தங்கம்(2000), கானா- ஒரு வெண்கலம் (1992) என அவர்களின் சாதனை பட்டியல் இருக்கிறது.
  • ஆசிய நாடுகளை பொருத்த வரை ஜப்பான் மட்டும் ஒரே ஒரு முறை வெண்கலம் வென்று இருக்கிறது (1968). இதுவரை மூன்று ஆசிய நாடுகள் மட்டுமே அரை தகுதி பெற்று உள்ளன. ஜப்பான், இந்தியா மற்றும் ஈராக் (2004)
  • ஒட்டு மொத்தமாக ஹங்கேரி மற்றும் இங்கிலாந்து அணிகள் மூன்று முறை தங்கம் பெற்று முதலிடத்திலும் அர்ஜண்டீணா, ரஷ்யா மற்றும் உருகுவே அணிகள் 2 முறை தங்கம் பெற்று இரண்டாவது இடத்திலும் இருக்கின்றன.
ஒலிம்பிக்கில் பெண்கள் கால்பந்தும் உண்டு. இதனை பற்றி தகவல்களை விட படங்களே சுவாரிஸ்யம் என்பதால் உங்களுக்காக சில படங்கள்


 இது வரை பொறுமையாக படித்தற்கு நன்றி. நேரம் கிடைக்கும் போது இது மாதிரி எதாவது எழுதலாம் என இருக்கிறேன். பார்க்கலாம்.......

8 comments:

தருமி said...

//ஒலிம்பிக்கில் பெண்கள் கால்பந்தும் உண்டு. இதனை பற்றி தகவல்களை விட படங்களே சுவாரிஸ்யம் என்பதால்...//

அப்டியா??!

//நேரம் கிடைக்கும் போது இது மாதிரி எதாவது எழுதலாம் என இருக்கிறேன்.//

கட்டாயமா. கிரிக்கெட்டுக்கு நிறைய ஆள் உண்டு. கால்பந்துக்கு கொஞ்சம்தான் ....... வாருங்கள்

தருமி said...

ப்ரேசில் விளையாடும் போது ஆடியன்ஸில் ஒருவ்ரைப் பார்த்தால் அப்டியே Oblisk மாதிரி ஒருத்தர் இருந்தாரே ... பாத்தீங்களா?

தருமி said...

ஓ! இதுதான் முதல் பதிவா...?

வரணும் தமிழ்ப்பதிவுலகிற்கு. வாழ்த்த்துக்கள்

M.Rishan Shareef said...

நல்ல பதிவு. தொடருங்கள்.

Bruno said...

நல்ல இடுகை
தொடருங்கள்

Tamilvanan said...

ந‌ல்ல‌ த‌க‌வ‌ல்க‌ள்.தொட‌ருங்க‌ள்

பலூன்காரன் said...

தங்கள் ஆதரவிற்கு நன்றி தருமி, எம்.ரிஷான் ஷெரீப், புருனோ மற்றும் Tamilvanan

shortfilmindia.com said...

வாழ்த்துக்கள்.. மேலும் பல பதிவுகளுடன் வர என் வாழ்த்து.

கேபிள் சங்கர்